பினோய்-பாதல்-தினேஷ் பாக்
பினோய்-பாதல்-தினேஷ் பாக் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் மைய வணிகப் பகுதிகளில் ஒன்றாகும். இது கொல்கத்தாவின் முக்கியமான நிர்வாக, வணிக மற்றும் வருவாய்சார் பகுதியாகவுமுள்ளது. சுருக்கமாக "பி. பி. டி. பாக்" என அழைக்கப்படும் இப்பகுதி முன்னர் "குளச் சதுக்கம்" என்றும் அதன் பின்னர் "டல்ஹவுசி சதுக்கம்" எனவும் அழைக்கப்பட்டு வந்தது. மேற்கு வங்காள அரசின் முக்கியக் கட்டிடங்களும் அலுவலகங்களும் இங்குள்ளன. எழுத்தர்களின் கட்டிடம், மேற்கு வங்கத் தலைமைச் செயலகம், ஆளுநர் வசிப்பிடம், சட்டப்பேரவைக் கட்டிடம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவை இங்கமைந்துள்ளன.
Read article